காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என்று சொல்ல ரஜினிக்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை நிபந்தனை
பெங்களூரு:
கர்நாடகாவில் ரஜினி நடித்துள்ள காலா படத்திற்கு கன்னட அமைப்புகள் , கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் கன்னடத்தில்,
கன்னட சகோதர சகோதரிகளுக்கு, நான் எதுவும் தப்பாக பேசவில்லை. இந்த திரைப்படம் வெளியாக நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இந்த வாட்டி தனியா மன்னிப்பு வீடியோவெல்லாம் இல்ல. இதையே மன்னிப்பா நெனைச்சி காலா படத்தை ரிலீஸ் செய்ய கன்னட அமைப்பினர் உதவி செய்ய வேண்டும் என்றும்,
இத்திரைப்படம் தொடர்பாக, கன்னட அமைப்புகள் என்னை எப்போது வேண்டுமானாலும் வந்து சந்திக்கலாம் என்று பேசியிருந்தார்.
இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என்று சொல்ல வேண்டும் என்றும், ஏற்கனவே காவிரி குறித்து ரஜினி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்ஈடும் என்றும் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை நிபந்தனை விதித்துள்ளது.