உன் மன்னிப்பை உன் துணைவியாரிடமே சொல்…! தரம் தாழ்ந்த திமுக அன்பழகனின் விமர்சனம்…

சென்னை:

மிழக அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், திமுக தலைவர் ஸ்டாலின் மிசா வழக்கில் கைதாகவில்லை என்று நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார். இதற்கு திமுக தரப்பில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன்,  தனது டுவிட்டர் பக்கத்தில் அமைச்சர் பாண்டியராஜன் குறித்து கடுமையாக விமர்சனம் சய்துள்ளார்.  இந்த தரம் தாழ்ந்த விமர்சனம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் ,மிசா வழக்கில் ஸ்டாலின் கைதாகவில்லை எனக் கூறி சர்ச்சையைக் கிளப்பிய அதிமுக அமைச்சர் மாபா பாண்டியராஜன் மன்னிப்புக் கேட்க முடியாது எனத் தெரிவித்தார்.

மிசா என்ற பெயரை சொல்ல உனக்கு தகுதி கிடையாது. நாலு கட்சி மாறி வந்த உனக்கு அரசியலில் பதில் சொல்ல வேண்டிய நிலை வந்ததே என்று வருத்தப்படுகிறேன். உன் மன்னிப்பை கொண்டுபோய் உன் துணைவியாரிடமே சொல்.  @mafoikprajan என அமைச்சார் பாண்டியராஜனுக்கு  பதிலடி கொடுத்துள்ளார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.