ஆர்யாவை காதலித்து மணந்த சாயிஷா கர்ப்பம்?

டிகை சாயிஷா, ஜெயம் ரவியுடன் வனமகன் படத்தில் நடித்தார் பின்னர் கார்த்தி ஜோடியாக கடைகுட்டி சிங்கம் படத்தில் நடித்தார். கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவுடன் நடித்தபோது அவரை காதலித்து மணந்தார். ஆனாலும் நடிப்பை விடாமல் தொடர்கிறார். தற்போது கணவர் ஆர்யாவுடன் இணைந்து டெட்டி என்ற படத்தில் நடிக்கிறார்.


கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருக்கும் சாயிஷா கணவர் ஆர்யாவுக்கு விதவிதமான பிரியாணிவகைகளை செய்து தந்து அசத்துகிறார். சாயிஷாவும் உடலில் வெயிட்போட்டிருக்கிறார். அதற்கு காரணம் அவர் கர்ப்பமாகி இருப்பதுதன் என்று தகவல் வெளியானது. இதுகுறித்து விளக்கம் அளித்த சாயிஷா ’நான் கர்ப்பமாக இல்லை மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்க காத்துக் கொண்டிருக்கிறேன்’ என்றார். சமீபத்தில் ஆல்பம் ஒன்றில் நடிக்கவும் சாயிஷா ஒப்புக்கொண்டிருக்கிறார்.