சர்ச்சை சாமியார் ஜக்கியின் பள்ளிக்கு 1.15 கோடி நன்கொடை அளித்த எஸ்.பி.ஐ. வங்கி

--

நெட்டிசன்:

ங்களது வங்கிக் கணக்கு இருப்பில் குறைந்தபட்ச தொகை குறைந்தால் வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எஸ்.பி.ஐ. அறிவித்துள்ளது.

பெருநகரங்கள், நகரங்கள், புறநகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள வங்கியின் வாடிக்கையாளர்கள், குறைந்தபட்சமாக, முறையே, 5,000, 3,000, 2,000 மற்றும் 1,000 ரூபாய் இருப்பை, தங்கள் சேமிப்புக் கணக்கில் பராமரிக்க வேண்டும்.

பெருநகரை பொறுத்தவரை, இந்த மாதாந்திர இருப்பில், 75 மற்றும் 50 சதவீதம் குறைந்தால், முறையே, 100 மற்றும் 50 ரூபாய் அபராதத்துடன், சேவை வரியும் வசூலிக்கப்படும். இத்தொகை, பிற இடங்களுக்கு மாறுபடும் என, எஸ்.பி.ஐ., நிர்வாகம் தெரிவித்துள்ளது

இது வரும் ஏப்ரல் 1ம் தேதி அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது. எஸ்.பி.ஐயின் இந்த அறிவிப்புக்கு நாடு முழுதும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

இந்த நிலையில், சர்ச்சை சாமியார் ஜக்கி வாசுதேவ் நடத்தும் பள்ளிகளுக்கு நன்கொடைாயக ஒரு கோடியே பதினைந்து லட்சத்து 65 ஆயிரம் ரூபாயை அள்ளிக்கொடுத்திருக்கிறது எஸ்.பி.ஐ. வங்கி.

இதற்கும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. “கழிவறை வசதி இன்றி அரசு பள்ளிகள் இருக்கின்றன. அவற்றுக்கு உதவினாலாவது ஏழை மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்”  என்று நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

(வாட்ஸ் அப்)