டில்லி:
பல மாநிலங்களில் தற்போது பண தட்டுப்பாடு நிலவுகிறது. இதை தவிர்க்க கூடுதலாக 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பு பணியை ரிசர்வ் வங்கி முடுக்கிவிட்டுள்ளது.

இந்நிலையில் எஸ்பிஐ சிஇஓ நீரஜ் வியாஸ் தனது டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘ ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி, முதல் மற்றும் 2ம் தர நகரங்களில் சில்லரை விற்பனை நிறுவனங்களில் உள்ள சுவைப் மெஷின்களில் எஸ்பிஐ மற்றும் பிற வங்கிகளின் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி ஒரு நாளைக்கு ரூ.1,000, சிறிய நகரங்களில் உள்ள மெஷின்களில் 2 ஆயிரம் ரூபாயை எந்தவித கட்டணமும் இன்றி எடுத்துக் கொள்ளலாம்.

நாடு முழுவதும் விற்பனை நிறுவனங்களில் வைக்கப்பட்டுள்ள 6 லட்சத்து 8 ஆயிரம் எஸ்பிஐ சுவைப் மெஷின்களில், 4 லட்சத்து 78 ஆயிரம் மெஷின்களில் அந்த வங்கி மற்றும் பிற வங்கிகளின் வாடிக்கையாளர்கள் பணம் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.