டில்லி

ங்கிக் கணக்கில் குறைந்த பட்ச தொகை வைக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து பாரத ஸ்டேட் வங்கி ரூ. 1771 கோடி அபராதம் விதித்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி குறைந்த பட்ச தொகையை தனது கணக்கில் வைக்காதவர்களிடம் இருந்து அபராதம் விதிக்கிறது.   பொதுவாக பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்துள்ளனவர்களில் பெரும்பான்மயோனோர் ஓய்வூதியத்தில் வாழ்க்கை நடத்துபவர்கள்,  சாதாரண நிலையில் உள்ளோர், மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் ஆவார்கள்.    அவர்களால் குறைந்த பட்ச தொகையை தங்கள் கணக்கில் வைக்க முடிவதில்லை.

இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கி குறைந்த பட்ச தொகையை தங்கள் கணக்கில் வைக்காதவர்களுக்கு அபராதம் விதிப்பதாக அறிவித்தது.   இது பலருக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது.  தற்போது கடந்த ஜூலை முதல் நவம்பர் வரையிலான காலாண்டில் சுமார்  ரூ. 1581, 85 கோடி லாபத்தை பாரத ஸ்டேட் வங்கி ஈட்டியுள்ளது.  இதில் ரூ.1771 கோடி குறைந்த பட்ச தொகையை தனது கணக்கில் வைக்காத வாடிக்கையாளர்களின்  அபராதம் ஆகும்.

இதில் பலருக்கு தனது கணக்கில் இருந்து அபராதமாக தொகை பிடிக்கப் பட்டது குறித்து தெரியாமாலே உள்ளனர்.   ”பாரத ஸ்டேட் வங்கி என்பது அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது.    அரசுடமையாக்கப் பட்ட வங்கிகள்மக்களின் நலனுக்காக செயல் படுவதாக கூறப்படுகிறது    ஆனால் இது போல அபராதம் விதிப்பது மக்களை கொள்ளை அடிப்பதற்கு சமம் “  என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்