1ஆண்டுக்கு மேலான வைப்புத் தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது எஸ்பிஐ வங்கி

டில்லி:

ங்கியில் சேமிக்கப்படும் நிரந்தர  வைப்புத் தொகைக்கான வட்டி விகிதங்களை எஸ்.பி.ஐ. வங்கி உயர்த்தி அறிவித்துள்ளது.

அதன்படி ஓராண்டுக்கு மேல் நிரந்தர வைப்பு தொகை வைக்கப்படும் பணத்திற்கு சிறிய அளவிளான வட்டி உயர்வை அறிவித்து உள்ளது.

இதுகுறித்து எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள குறிப்பில்,  7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான கால கட்டம் தொடங்கி, 211 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்குள்ளான கால கட்டம் வரையிலான வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.

எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ள பிக்சட் டெபாசிட்டுகளுக்கான புதிய வட்டி விகிதம்

ஒரு வருடம் முதல் இரண்டு வருடத்திற்குள்ளாக வட்டி விகிதம் 6.7 ஆகவும், 2 முதல் 3 ஆண்டுகள் வரையிலான வைப்புத் தொகைக்கு 6.75 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

3 முதல் ஐந்து வருடத்திற்குள்ளாக 6.8 சதவீதமாகவும், ஐந்து முதல் 10 வருடத்திற்குள்ளாக 6.85 சதவீதமாகவும் வட்டி விகிதம் உயர்த்தப்படுவதாக எஸ்.பி.ஐ., வங்கி அறிவித்துள்ளது.

மூத்த குடிமகன்களுக்கான வைப்புத் தொகை வட்டி விகிதம் ஏற்கனவே 7.2 சதவிகிதம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 7,15 சதவிகிதமாக  உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த வட்டி விகித உயர்வு இன்றே நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.