பொதுமக்களுக்கு அடுத்த ஆப்பு: ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கு ரூ.25 கட்டணம்: எஸ்பிஐ அறிவிப்பு

--

டில்லி,

டுத்த மாதம் முதல் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பதற்கு ரூ.25 கட்டணம் வசூலிக்க இருப்பதாக ஸ்டேங் வங்கி அறிவித்து உள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்புக்கு பிறகு வங்கிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மக்களை பாதிக்கும் வகையில் எடுத்து வருகின்றன.

பணமில்லா பரிவர்த்தனை என்ற பெயரில் அனைத்து வகையான பரிவர்த்தனைகளையும் ஆன்லைனில் செய்ய மக்களை வற்புறுத்தி உள்ளது.

அதைத்தொடந்து பொதுத்துறை வங்கியான ஸ்டேங் பாங்க் ஆப் இந்தியா, வங்கி கணக்கில் வாடிக்கையாளர்கள் குறைந்த பட்ச ரூபாய் ரூ.5000 வைத்திருக்க  வேண்டும் என்று அறிவித்து வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்நிலையில் ஜூன் 1 முதல் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கு ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும் என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்து உள்ளது.

ஏடிஎம்மில் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் ரூ.25 கட்டணம் விதிக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

எஸ்பிஐ-ன் இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.