டில்லி:

நாட்டின மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ. வங்கி டெபாசிட்டுக்கு வழங்கப்பட்டு வரும் வட்டி விகிதத்தில் சிறு மாற்றத்தை செய்துள்ளது. இந்த மாற்றம் இன்றுமுதல் அமலுக்கு வருவதாகவும் கூறி உள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசு பண மதிப்பிழப்பு, மற்றும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை போன்ற காரணங்களால் வங்கி வட்டிகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன.

ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த வட்டியை குறைத்து அனைத்து வங்கிகளும் அறிவித்தன. இந்நிலையில், எஸ்பிஐ வங்கி தற்போது வட்டி விகிதத்தை சற்று உயர்த்தி அறிவித்து உள்ளது.

அதன்­படி, 7 – 45 நாட்­கள் வரை­யி­லான டிபா­சிட்­டுக்கு அளிக்­கப்­பட்ட, 5.25 சத­வீ­தம் வட்டி, தற்­போது, 5.75 சத­வீ­த­மாக உயர்த்­தப்­பட்டு உள்­ளது.

மேலும், ஓராண்டு டிபா­சிட்­டுக்­கான வட்டி விகி­தம், 6.25 சத­வீ­தத்­தில் இருந்து, 6.40 சத­வீ­த­மாக அதி­க­ரிக்­கப்­பட்டு உள்­ளது.

2 – 10 ஆண்­டு­கள் வரை­யி­லான டிபா­சிட்­டுக்­கான வட்டி விகி­தம், 6.50 சத­வீ­த­மாக நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது. இது, இதற்கு முன், 6 சத­வீ­த­மாக இருந்­தது.மூத்த குடி­மக்­க­ளுக்­கான வட்டி விகி­தம், 6.5 சத­வீ­தத்­தில் இருந்து, 7 சத­வீ­த­மாக அதி­க­ரிக்­கப்­பட்டு உள்­ளது.

இந்த வட்டி விகித உயர்வு, உட­ன­டி­யாக அம­லுக்கு வரு­கிறது.

இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.இவ்­வங்கி, ஏற்­க­னவே, 1 கோடி ரூபாய்க்­கும் மேற்­பட்ட டிபா­சிட்­டு­க­ளுக்­கான வட்­டியை உயர்த்தி உள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

இதுகுறித்து மேலும் விவரம் அறிய கீழே உள்ள லிங்கை கிளிக்குங்கள்

https://www.sbi.co.in/portal/web/interest-rates/domestic-term-deposits