புதுடெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25%அளவிற்கு குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த வட்டிக் குறைப்பானது ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியானது ரெப்போ வட்டி விகிதத்தை தொடர்ந்து குறைத்து வந்த நிலையில், தற்போது எஸ்பிஐ வங்கியும் தன் பங்கிற்கு வட்டி விகிதத்தை குறைத்து அறிவித்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

இந்த குறைப்பு அறிவிப்பின் மூலம் வீடு மற்றும் வாகனங்களுக்கான கடன்களைப் பெறுவோருக்கு 0.25% அளவிற்கு வட்டி குறைகிறது. இதற்கு முன்பு வசூலிக்கப்பட்ட 8.05% என்ற விகிதத்திலிருந்து 7.90% என்பதாக இனிமேல் வட்டி வசூலிக்கப்படும்.

எனவே, ஜனவரி 1ம் தேதியிலிருந்து, வங்கிக் கடன் பெறுவோர், தங்களின் சார்பாக 7.90% வட்டியை செலுத்துவார்கள்.