புதுடெல்லி: இந்த ஆண்டின் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், ரூ.3,622 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் கேட்கப்பட்ட கேள்விக்கு அளிக்கப்பட்டுள்ள பதிலில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்தில் மட்டும் ரூ.1,365.69 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்த அளவு, 65.21% அதிகரித்து, ஏப்ரல் மாத விற்பனை ரூ.2,256.37 கோடி என்பதாக இருந்தது.

ஏப்ரல் மாத்தில், மும்பையில் அதிக அளவாக ரூ.694 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டன. அதற்கடுத்து கொல்கத்தாவில் ரூ.417.31 கோடி மதிப்பிலான பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டன.

இதற்கடுத்த நிலையில், டெல்லி மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்கள் இடம்பெறுகின்றன.