கடன் தவணை செலுத்த 2 ஆண்டுகள் கூடுதல் அவகாசம்: எஸ்பிஐ அறிவிப்பு

டெல்லி: கடன் தவணை தொகையை திருப்பி செலுத்த வாடிக்கையாளர்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி 2 ஆண்டுகள் அவகாசம் அளித்துள்ளது.

இது தொடர்பாக அந்த வங்கி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: வீட்டு கடன், வாகனக்கடன் என எந்த கடன் பெற்றவர்களும், கடனை திருப்பி செலுத்துவதற்கு மேலும், 2 ஆண்டுகள் அவகாசம் தரப்படுகிறது.

மார்ச் 1ம் தேதிக்கு முன்பாக கடன் பெற்றவர்களுக்கு இந்த சலுகை பொருந்தும். டிசம்பர் 31ம் தேதி வரை அதற்கு விண்ணப்பிக்கலாம்.  வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்து, வங்கிக் கிளைக்கு நேரில் சென்று கால அவகாசத்தை நீட்டித்து கொள்ளலாம்.

இந்த திட்டத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளரிடம், ஆண்டுக்கு கூடுதலாக 0.35 சதவீத வட்டி வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.