மும்பை

பாரத ஸ்டேட் வங்கி ரெப்போ வட்டி விகிதத்துக்கு ஏற்ப வட்டி விகிதத்துடன்  வீட்டுக் கடன் வழங்க உள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் என்பது ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் ஆகும். இதை அடிப்படையாகக் கொண்டு வங்கிகள் கடன் வழங்குகின்றன. அதாவது வங்கிகள் வழங்கும் கடனுக்கு ரெப்போ வட்டியுடன் மேலும் இதற்கான செலவுகளை கணக்கிட்டு வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குகின்ரன.

தற்போது ரெப்போ வட்டி விகிதம் வரும் ஜூலை 1 முதல் 0.25% குறைகிறது. அதாவது ரெப்போ வட்டி விகிதம் தற்போதைய 6% லிருந்து 5.75 ஆக குறைய உள்ளது பாரத ஸ்டேட் வங்கி தற்போது வழங்கி வரும் வீட்டுக்கடனுக்கான வட்டிக்கு ரெப்போ வட்டிக்கு மேல் 2.65% அதிகரித்து வழங்கி வருகிறது. அதாவது ஜூலை 1 முதல் இந்த வட்டி விகிதங்கள் 8.40% ஆக குறைய உள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியின் துணை நிர்வாக இயக்குனர் பிரஷாந்த் குமார், “வரும் ஜூலை1 முதல் ஸ்டேட் வங்கி புதிய வீட்டுக் கடனை அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி இனி அந்த கடன்களின் வட்டி ரெப்போ வட்டிக்கு இணையாக உடனடியாக மாறுதல் அடையும். அதாவது இந்த கடன்களுக்கான வட்டியில் கணக்கிடப்படும் கூடுதல் தொகை மாறாது. அத்துடன் இந்த மாறுதல் உடனுக்குடன் அமுல் படுத்தப்படும்.

இதைத் தவிர வழக்கமான வட்டி விகிதத்திலும் வீட்டுக் கடன்கள் வழங்கப்படும். ஏற்கனவே கடன் வாங்கி உள்ளவர்கள் இந்த முறைக்கு மாற விரும்பினால் அதற்கான கட்டணத்தை செலுத்தி விட்டு மாறிக் கொள்ளலாம். ஏற்கனவே பல சேமிப்பு கணக்குகள் இது போல ரெபோ வட்டியுடன் இணைக்கப்பட்டுள்ளன.” என தெரிவித்துள்ளார்.