புதுடெல்லி:

நாடு தழுவிய வாடிக்கையாளர் குறைதீர்வு கூட்டத்தை மே 28-ம் தேதி நடத்த ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா நடத்தவுள்ளது.


ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் 17 தலைமை அலுவலகங்கள் மூலம் 500 இடங்களில் நடக்கும் இந்த குறைதீர்வு கூட்டத்தில் 1 லட்சம் வாடிக்கையாளர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.

இந்த சந்திப்பு எங்கள் வங்கியுடனான வாடிக்கையாளர்களின் அனுபவத்தை பகிர்வதாகவும், அவர்களது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வதாக அமையும் என்று ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் பி.கே.குப்தா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த மெகா குறை தீர்வுக் கூட்டத்தில் வங்கியின் மூத்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

வங்கியின் சேவை, கருத்துகளை வங்கி அதிகாரிகளுடன் வாடிக்கையாளர்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

மாற்று வங்கி பயன்பாடு, டிஜிட்டல் பயன்பாடு குறித்து இந்த கூட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு வங்கி அதிகாரிகள் எடுத்துரைப்பார்கள் என ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.