கடந்த 2 ஆண்டுகளில் 1 லட்சம் கோடி கடன் தொகையை தள்ளுபடி செய்த எஸ்பிஐ வங்கி

புதுடெல்லி:

கடந்த 2 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி கடன் தொகையை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தள்ளுபடி செய்துள்ளது.


கடந்த மார்ச் 31-ம் தேதி வரை ரூ. 61 ஆயிரத்து 663 வரையிலும், கடந்த நிதி ஆண்டில் ரூ.40 ஆயிரத்து 809 வரையிலும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தள்ளுபடி செய்துள்ளது.

3 நிதி ஆண்டுகளில் இந்த தள்ளுபடி தொகை ரூ.57 ஆயிரத்து 646 கோடியை எட்டியுள்ளது.

எனினும், கடந்த 2019 நிதி ஆண்டில் கடன் வசூலிப்பு 31 ஆயிரத்து 512 கோடியை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா எட்டியுள்ளது.

கடன் தொகையை தள்ளுபடி செய்வது வங்கி நடைமுறைதான் என்கிறார் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சேர்மன் ரஜினீஷ் குமார்.