வாஷிங்டன்:

ந்திய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கியின்  நிதி ஆலோசகராக பணியாற்றி வந்த அன்ஷூலா கான்ட், உலக வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிதி ஆலோசகராக வும் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைமை நிதி ஆலோசகராக பணியாற்றிவரும் அன்ஷூலா கான்ட் தனது  திறமையால், நஷ்டத்தில் இயங்கி வந்த எஸ்பிஐ வங்கி,  சுமார் 3800 கோடி அமெரிக்க டாலர்கள் அளவிலான நிதி இருப்பும், 50 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சொத்துகளும் குவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்,  உலக வங்கியின் தலைமை நிதி அலுவலர் மற்றும் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் அன்ஷூலா காந்த், நியமிக்கப்பட்டுள்ளார்.

உலக நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கு கடனுதவி அளிக்கும் உலக வங்கி அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இயங்கி வருகிறது.  இந்த வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிதி அலுவலராக அன்ஷூலா கான்ட், நியமிக்கப்பட்டிருப்பதாக, உலக வங்கி குழுமத் தலைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்துள்ளார்.

வங்கித் துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் வாய்ந்த அன்ஷூலா கான்ட், தற்போது பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.

அன்ஷூலா கான்ட்டின் சொந்த ஊர்  உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள  ரூர்க்கி. பள்ளிப்படிப்பை அங்கு முடிந்தவர், கல்லூரி படிப்பை டில்லி  லேடி ஸ்ரீராம் பெண்கள் கல்லூரியில் பொருளாதாரம் பயின்றார். பின்னர்,  1983ம் ஆண்டு பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரியாக பணியமர்த்தப்பட்டார்.

அங்கு பல்வேறு பணிகளில் தொடர்ந்தவர், தலைமைப் பொது மேலாளர், துணை நிர்வாக இயக்கு நர், தேசிய பங்குச் சந்தை பங்குதாரர் இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளையும் வகித்து வந்துள்ளார்.  பங்கு சந்தை மற்றும் வங்கியியலில் சிறப்பு அனுபவம் பெற்றிருக்கும் அன்ஷூலா கான்ட், சில்லறை வர்த்தகம், கார்ப்பரேட் கிரடிட் உள்ளிட்ட பிரிவுகளில் தனித்துவம் பெற்றவர் என்று கூறப்படுகிறது.