இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று (செப்டம்பர் 25) சென்னையில் காலமானார்.

ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமுமே இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்தது. திரையுலகினர் மட்டுமன்றி குடியரசுத் தலைவர், பிரதமர், பல்வேறு மாநில முதல்வர்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் .

இன்று (செப்டம்பர் 26) எஸ்பிபியின் உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

அவருடைய மறைவுக்கு பலரும் எஸ்பிபி அளித்த பேட்டிகள், மேடைக் கச்சேரிகள் என வீடியோக்களை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர் .

அதில் ஒரு வீடியோ அனைவடையும் பிரமிக்க வைத்துள்ளது .அது சபரிமலை ஐயப்பன் கோயிலில் எடுக்கப்பட்டது.

பம்பை நதியிலிருந்து ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல, சுமையாளிகள் தூக்கிச் செல்லும் டோலி இருக்கும். சேர் மாதிரி இருக்கும் இந்த டோலியில் உட்காரவைத்து, நால்வர் தூக்கி நடந்தே ஐயப்பன் கோயிலுக்கு அழைத்துச் செல்வார்கள்.

அப்படியொரு முறை டோலியில் ஐயப்பன் கோயிலுக்கு எஸ்பிபி செல்லும்போது , டோலியில் உட்காரும் முன்பு, தன்னைத் தூக்கிக்கொண்டு போகும் அனைத்துத் தொழிலாளிகளின் காலைத் தொட்டு வணங்கியுள்ளார் .

இந்த வீடியோ பதிவை நேற்று முதல் சமூக வலைதளத்தில் பலரும் ஷேர் செய்து வருகிறார்கள்.