டெல்லி: இந்தியாவில் ஆப்ரிக்க இன சிறுத்தையை கொண்டு வர உச்ச நீதி மன்றம் அனுமதி அளித்து உள்ளது.

வெளிநாட்டு விலங்கினங்கள் என்ற அடிப்படையில் இந்த ஆப்ரிக்க சிறுத்தைகளை இந்தியாவுக்கு கொண்டு வர உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்து இருந்தது. இப்போது அதில் இருந்து விலகி இருக்கிறது.

இதையடுத்து நமீபியா நாட்டில் இருந்து சிறுத்தையை இந்தியா கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடங்க உள்ளன. அவை மத்திய பிரதேசத்தில் உள்ள குன்ஹூ வனவிலங்குகள் சரணாலயத்துக்கு கொண்டு வரப்பட உள்ளன.

அதன்பிறகு மற்ற பகுதிகளுக்கு விரிவான ஆய்வுக்கு கொண்டு செல்லப் படலாம் எனறு எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக 4 மாதங்களுக்கு ஒரு முறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேசிய புலிகள் காப்பகத்தை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது.

வனவிலங்கு நிபுணர்களான எம் கே ரஞ்சித்சிங், தனஞ்சாய் மோகன் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் டிஐஜி (வனவிலங்கு) ஆகியோர் அடங்கிய நிபுணர் குழு வழி நடத்தும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.