சென்னை: 

மிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தலை நடத்த உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் தேர்தல் முடிவு நீதிமன்ற நடவடிக்கைகளின் இறுதி முடிவுக்கு உட்பட்டது என்பதை தெளிவுபடுத்துகிறது.

தமிழக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் ஸ்ரீநிவாசன் உள்பட பலர் மீது சூதாட்டம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில், நிர்வாகிகள் தேர்தலை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு  நீதிபதிகள் எஸ்.ஏ.போட் மற்றும் எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  விசாரணையின்போது, மாநில கிரிக்கெட் அமைப்பிற்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், தமிழக கிரிக்கெட் சங்க தேர்தலை நடத்த  அனுமதிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.

அதைத்தொடர்ந்து  விசாரணைக்கு ஆஜரான,  பி.சி.சி.ஐ.யின் நிர்வாகிகள் குழுவின் ஆலோசகர்,  அமிகஸ் கியூரியாக உதவி செய்யும் மூத்த வழக்கறிஞர் பி எஸ் நரசிம்ஹா,  பி.சி.சி.ஐ.யின் அரசியலமைப்பிற்கு இணங்காத வேறு சில சங்கங்களில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் இருப்பதாகவும், 38 கிரிக்கெட் சங்கங்களில் நான்கு மட்டுமே புதிய பிசிசிஐ அரசியலமைப்பை ஏற்கத் தவறிவிட்டன. அதனால் தேர்தல் நடத்தக்கூடாது என்று வாதிட்டார்.

வழக்கை விசாரித்த உச்சநீதி மன்ற அமர்வு,  தமிழக கிரிக்கெட் சங்கம் தேர்தல் நடத்தலாம் என்று இடைக்கால உத்தரவிட்டது. ஆனால் முடிவுகளை அறிவிக்கக்கூடாது என்று  கூறிய நீதிமனறம், இது,

உச்ச நீதிமன்றத்தின் இறுதி  உத்தரவுக்கு உட்பட்டது என்றும், நிர்வாகிகள் தகுதி நீக்கம் விதிமுறைகள் “அலுவலக பொறுப்பாளர்களுக்கு மட்டுமே இருக்கும்” என்று மேலும் உத்தரவிட்டது.