Euthanasia,conceptual image

டில்லி

யிருக்கு போராடும் நோயாளிகள் விரும்பினால் கருணைக் கொலைக்கு அனுமதி வழங்கலாம் என உச்சநீதிமன்றம் வரலாற்று முக்கியம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றை வழங்கி உள்ளது.

கருணைக் கொலை என்பது இனி பிழைக்க மாட்டார்கள் என தெரிந்த பின் அவர்களின் முன் அனுமதியுடன் உயிர் காக்கும் உபகரணங்களை நீக்குவது ஆகும்.   அதாவது முதியோர்கள் தாங்கள் கடுமையாக உடல்நிலை பாதிக்கும் சமயத்தில் இனி பிழைக்க மாட்டோம் என தெரிய வந்தால் தங்களுக்கு தரப்படும் உயிர்காக்கும் உபகரண சிகிச்சைகளை நீக்க அனுமதி கொடுத்திருக்கும் போது அவ்வாறு செய்வதே கருணைக் கொலை ஆகும்.

இந்த கருணைக் கொலை குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தீபக் மிஸ்ரா தலைமையில் உள்ள ஐந்து நீதிபதிகள் சட்ட அமர்வின் கீழ் விசாரிக்கப்பட்டது.

இன்று அந்த அமர்வு வழங்கிய தீர்ப்பில், “கருணைக் கொலை பற்றி ஏற்கனவே விவரிக்கப்பட்டுள்ளது.   மருத்துவர்களின் இறுதி முடிவின் படியும் ஒரு சில கட்டுப்பாட்டின் அடிப்படையிலும் கருணைக் கொலைக்கு அனுமதி வழங்கலாம்.    மேலும் அனைத்து உயிரினங்களுக்கும் கௌரவமாக மரணம் அடையும் உரிமை உள்ளது.   அதனால் நோய் வாய்ப் பட்டு துயருற்று மரணம் அடையும் நிலையில் உள்ள முதியோர்களுக்கு உதவ இந்த அனுமதி வழங்கப்படுகிறது”  என தெரிவித்துளது