டிக்டாக் செயலி தரவிரக்க தடைக்கு உச்சநீதிமன்றம் எதிர்ப்பு

டில்லி

சென்னை உயர்நீதிமன்றத்தின் டிக்டாக் செயலி தடை செய்யும் வேண்டுகோளுக்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துளது.

உலகெங்கும் புகழ்பெற்றுள்ள சீன செயலியான டிக்டாக் மூலம் பல பயணாளிகள் தங்களின் நடிப்பு மற்றும் நடனத் திறனை வெளிபடுத்தும் விடியோக்களை பகிர்ந்தனர். அவற்றில் பல வீடியோக்கள் ஆட்சேபக்ரமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவிலிதை சுமர் 5.4 கோடி பேர் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த செயலியை தடை செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் அளிக்கபட்ட மனு மிதான தீர்ப்பில் இந்த செயலியை தடை விதிக்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொள்ளப்பட்டது. அத்துடன் இந்த செயலியை கூகுள் மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்குமாறு உத்தரவிடப்பட்டது. அதன்படி கூகுள் மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோரில் இருந்து இந்த செயலி நிக்கப்பட்டுள்து

டிக் டாக் செயலியை தடை செய்யக் கூடாது எனக் கோரி ஒரு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்து அந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. அப்போது உசநீதிமன்றம் டிக்டாக் செயலியை தடை செய்ய கோரியதை மறு பரிசிலனை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டது.

சென்னை உயர்நீதிமன்றம் வரும் 24 ஆம் தேதிக்குள் பிளே ஸ்டோரில் செயலிக்கு தடை விதித்தது குறித்தும் முடிவு எடுக்க வேண்டும் எனவும் அவ்வாறு இல்லை எனில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.