ஆதார் எண்ணை இணைக்க அரசு மக்களை நிர்பந்தப்படுத்துகிறதா? : உச்சநீதிமன்றம் கேள்வி

டில்லி

த்திய அரசு மக்களை அனத்து திட்டங்களுடனும் ஆதார் எண்ணை இணைக்க நிர்பந்தப் படுத்துகிறதா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி குடிமக்களின் தனி உரிமை பாதுகாக்கப் படவேண்டும் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது.   அதே நேரத்தில் ஆதார் எண்ணை அரசு பல திட்டங்களுக்கு இணைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.   ரேஷன் கார்டு, பான் கார்டு, கேஸ் இணைப்பு, மொபைல் எண் ஆகியவற்றோடு தற்போது பள்ளி இறுதித் தேர்வு எழுதும் மாணவர்களும் ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு ஒன்றை அரசு பிறப்பித்துள்ளது.

ஆதார் இணைப்பு அவசியமற்றது என ஒரு வழக்கு தொடுக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்துக் கொண்டுள்ளது.   இந்த வழக்கு விசாரணையின் போது மனுதாரர்களின் வழக்கறிஞர்கள் ஆதார் இணைப்புக்கு டிசம்பர் 31 என கெடு விதித்தது தவறு எனவும்,  ஆதார் இணைப்பின் மூலம் தனி உரிமை பாதுகாப்பு கேள்விக்குள்ளாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.

உச்சநீதிமன்றம் அரசின் வழக்கறிஞரான வேணுகோபாலிடம் இது குறித்து கேட்ட போது,  அரசு யாரையும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என நிர்பந்தப்படுத்தவில்லை என தெரிவித்தார்.   ஆனால் அதை எழுத்து மூலம் பதில் அளிக்க மறுத்து விட்டார்.  இதைத் தொடர்ந்து நீதிபதிகள் அரசிடம் “குடிமக்கல் ஆதார் எண்ணை அனைத்து திட்டங்களுடனும் இணைக்க நிர்ப்பந்தப்படுத்துகிறதா?  இதற்கான பதிலை வரும் திங்கட்கிழமை (அக்டோபர் 30)க்குள் எழுத்துபூர்வமாக அறிவிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே அரசு அனைத்து திட்டங்களுக்கும் ஏற்கனவே ஆதார் எண் உள்ளவர்கள் வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் எனவும்,  ஆதார் எண் உள்ளவர்கள் அதை மார்ச் 31ஆம் தேதிக்குள் வாங்கி அதை இணைக்க வேண்டும் எனவும் அறிவித்து இருந்தது தெரிந்ததே.