Random image

லோக்பால் எப்போது? மத்திய அரசு பதில் தெரிவிக்க உச்சநீதி மன்றம் 10 நாள் அவகாசம்

டில்லி:

லோக்பால் அமைப்பு எப்போது அமைக்கப்படும். அதற்கான கெடு குறித்து,  10 நாட்களில் பதிலளிக்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

நாட்டில் ஊழக்கு எதிரான லோக் ஆயுக்தா, லோக்பால் நியமனங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. பிரதமர், மத்திய அமைச்சர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் மற்றும்  அரசு அதிகாரிகளின் ஊழல்களை விசாரிக்க வகை செய்யும்  வகையில்  கொண்டு வரப்பட்டது லோக்பால் மசோதா. இந்த சட்டம் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது கொண்டு வரப்பட்டது.

பாரதியஜனதா ஆட்சிக்கு வந்தால் உடனே லோக்பால் சட்டம் நிறைவேற்றப்படும் என்று பிரதமர் மோடி வந்த நிலையில், பாஜ ஆட்சி வந்து 4 ஆண்டுகள் முடிவடையும் நிலையில் லோக்பால் சட்டத்தை நிறைவேற்றாமல் மத்திய பாரதியஜனதா அரசு தாமதப்படுத்தி வருகிறது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த உச்சநீதி மன்றம்,  லோக்பால் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தது.

இந்த நிலையில், இநத் வழக்கு இன்று மீண்டும்  உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் பானுமதி ஆகியோரின் அமர்வின் கீழ் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “நீதிமன்றம் உத்த ரவிட்டும் இது வரை லோக்பால் அமைப்பை ஏற்படுத்தாதது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

“மத்திய அரசு விரைந்து லோக்பால் அமைப்பை ஏற்படுத்த வேண்டும் எனவும் லோக்பால் அமைப்பதற்கான காலக்கெடு குறித்து 10 நாட்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்” எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.