பூரி ஜகன்னாதர் கோவிலில் போலிசுக்கு புதிய கட்டுப்பாடு விதித்த உச்சநீதிமன்றம்

டில்லி
பூரி ஜகன்னாதர் கோவிலுக்குள் காவல்துறையினர் காலணி மற்றும் ஆயுதங்களுடன் நுழையக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


ஒரிசா மாநிலத்தில் பூரியில் உள்ள ஜகன்னாதர் கோவில் மிகவும் பிரபலமானதாகும். எப்போதும் இங்கு பக்தர்கள் கூஉட்டம் அலை மோதுவது வழக்கம். இந்த கோவிலில் பக்தர்களை வரிசையைல் அனுப்ப உத்தரவு இடப்பட்டது. அதற்காக வரிசைப்படுத்தி அனுப்ப காவலர்கள் நியமிக்கப்பட்டனர். இதற்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தினார்கள்.
இந்த மாதம் மூன்றாம் தேதி அன்று 12 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது வன்முறை வெடித்தது. இந்த வரிசை முறை ஏராளமான பக்தர்களின் உணர்வை புண்படுத்துவதாக அமைந்துள்ளதாக ஜகன்னாதர் பக்த சபை தலைவர் தெரிவித்துள்ளார். கலவரத்தின் போது கோவில் செல்லும் வழியை மறித்து டயர்களை போராட்டத்தினர் கொளுத்தி உள்ளனர்.
காவல்துறையினர் கோவிலுக்குள் துப்பாக்கி மற்றும் காலணிகளுடன் கோவிலுக்குள் நுழைந்ததே இந்த போராட்டத்துக்கு முக்கிய காரணம் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர். இதை ஒட்டி உச்சநீதிமன்றம் பூரி ஜகன்னாதர் கோவிலுக்குள் காவலர்கள் காலணி மற்றும் ஆயுதங்களுடன் செல்லக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.