ஆர்காம் சொத்துக்களை ஜியோ நிறுவனத்திற்கு விற்பதில் இருந்த தடை நீக்கம்

டில்லி:

ஆர்காம் நிறுவன சொத்துக்களை ஜியோ நிறுவனத்திற்கு விற்பதில் இருந்த தடையை உச்ச நீதிமன்றம் விலக்கியது. இதனை தொடர்ந்து, பங்கு சந்தையில் இன்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பங்கு 15.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்திய டெலிகாம் சந்தையில் ஆதிக்கம் செலுத்திய ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் போட்டியின் காரணமாக வர்த்தகத்தையும் வாடிக்கையாளர்களையும் அதிகளவில் இழந்தது.

இதுமட்டும் அல்லாமல், அதிகளவிலான கடன் நெருக்கடியால் ஆர்காம் சரிவர இயக்க முடியாமலும் தவித்தது. இந்நிலையில் தனது சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் கடனை அடைக்க முடியும் என அறிவித்திருந்தார் அனில் அம்பானி.

ஆனால், ஆர்காம் மற்றும் அதன் இரண்டு கிளை நிறுவனங்கள், நிறுவன சொத்துக்களை விற்பனை செய்யவோ அல்லது பரிமாற்றம் செய்யவோ கூடாது என நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது அனைவரும் அறிந்ததே.

தற்போது, ஆர்காம்-ஜியோ உடன்படிக்கைக்காக இரண்டு நாட்களுக்குள் 1,400 கோடி ரூபாய்க்கு அரசுக்கு பெருநிறுவன உத்தரவாதம் அளிக்குமாறு ஆர்காமின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் ரியால்டிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெருநிறுவன உத்தரவாதத்தை பெறும் ஒரு வாரத்திற்குள், ஆர்காம்-ஜியோ உடன்படிக்கைக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் வர்த்தக பரிவர்த்தனை முடிவடைந்ததும் ஆர்காம் நிறுவனம் எரிக்சன் மற்றும் ரிலையன்ஸ் இன்ப்ராடெல் லிமிடெட் (RITL)-இன் சிறு முதலீட்டாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை தொகையை செலுத்தும்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Rcom shares up 15.5%, Supreme court clears RCom asset sales to Reliance Jio, ஆர்காம் சொத்துக்களை ஜியோ நிறுவனத்திற்கு விற்பதில் இருந்த தடை நீக்கம்
-=-