டில்லி

ச்சநீதிமன்ற கொலிஜியம் மூன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு பதவி உயர்வை நிராகரித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்கிறது.    இந்த கொலிஜியத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மற்றும் நீதிபதிகள் சிக்ரி, பாப்டே, ரமணா மற்றும் மிஸ்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் மூன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு பதவி உயர்வு அளிக்க இந்த கொலிஜியம் நிராகரித்துள்ளதாக செய்திகள் வெளி வந்துள்ளன.   மேலும் அது குறித்த காரணங்களையும் அதிகாரபூர்வமற்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதில் ஒருவர் தனது வேலை நாட்களில் கோல்ஃப் விளையாட்டில் கலந்துக் கொள்ள விடுமுறையில் சென்றுள்ளதால் அவருக்கு பதவி உயர்வு அளிக்கவில்லையாம்.

மற்றொருவர் அவர் பணி புரியும் மாநில அரசின் ஹெலிகாப்டர்களை அடிக்கடி பயன் படுத்தியுள்ளதாகவும் அதனால் பதவி உயர்வு அளிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

மூன்றாமவர் அவர் பணி புரியும் மாநில அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்துக்கு ஒரு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியின் விருப்பத்துக்கு இணங்க தவறான தீர்ப்பு அளித்துள்ளாராம்.   இந்த தீர்ப்பு அந்த ஓய்வு பெற்ற  உச்சநீதிமன்ற நீதிபதியின் கடித்தத்தில் கண்டபடி அளிக்கப்பட்டுள்ளதாம்.

இது குறித்து விவரங்கள் மற்றும் நீதிபதிகளின் பெயர்களை உச்சநீதிமன்ற கொலிஜியம் வெளியிடவில்லை.  இதனால் அவர்கள் அலுவலகப் பணிகள் பாதிக்கலாம் என்பதால் வெளியிடப்படவில்லை எனவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.