டில்லி

ச்சநீதிமன்ற கொலிஜியம் நீதிபதி பதவிக்கு பரிந்துரைத்த ஜோசப்புக்கு அரசு நீதிபதி பதவி வழங்காதது குறித்து இன்று கொலிஜியம் கலந்துரையாடல் நிகழ்த்தியது.

உச்சநீதிமன்ற கொலிஜியம் என அழைக்கப்படும் நீதிபதிகள் தேர்ந்தெடுக்கும் குழு சமீபத்தில் ஒரு பரிந்துரையை மத்திய அரசுக்கு அளித்தது.   அந்தக் குழுவுல் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் செல்லமேஸ்வரர், ரஞ்சன் கோகாய், லோகுர் மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.  அவர்கள், “நீதிபதி கே எம் ஜோசப் உச்ச மன்ற நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட் மற்ற மாநில தலைமை நீதிபதிகளையும் மூத்த நீதிபதிகளையும் விட மிகவும் தகுதி வாய்ந்தவர்.   அவர் அனைத்து இனங்களிலும் இந்த பதவிக்கு தகுதியானவர்” என தெரிவித்திருந்தனர்.

ஆனால் மத்திய அரசு இந்த சிபாரிசை ஏற்கவில்லை.  உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைமை நீதிபதியாக  பதவி வகித்து வரும் ஜோசப் உத்தரகாண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வந்த வழக்கில் மத்திய அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியதால் அவருக்கு உச்சநீதிமன்ற நீதிபதி வழங்கப்படவில்லை என பரவலாக பேசப்பட்டது

இந்நிலையில் இது குறித்து கொலிஜியம் ஒரு கலந்துரையாடலை நிகழ்த்தியது  அதன் முடிவில் கொலிஜியம், ”உத்தர்காண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோசப்பை உச்சநிதிமன்ற நீதிபதி ஆக்க மத்திய சட்ட அமைச்சகம் மறுத்துள்ளதை மறு பரிசீலனை செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டது.  அத்துடன் கொல்கத்தா. ராஜஸ்தான், மற்றும் தெலுங்கான, ஆந்திரா ஆகிய மாநில நீதிமன்ற நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதி பதவிகள் அளிப்பதையும் பரிசில்லனை செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டது.   இந்த கலந்துரையாடலின் முடிவு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது” என அறிக்கை அளித்துள்ளது.