டில்லியையும் மும்பையையும் கடுமையாக விமர்சித்த உச்சநீதிமன்றம்

டில்லி

குப்பைகளை அள்ளாத டில்லி நகர நிர்வாகத்தையும்  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதற்காக மும்பை நக்ர் நிர்வாகத்தையும் உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் திடக்கழிவு மேலாண்மை கொள்கையை நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிட்டது.    இதுவரை பல மாநிலங்களில் இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.   இதை ஒட்டி 10 மாநிலங்களுக்கு  உச்சநீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

மேலும் இந்த மாநிலங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.  இந்த வழக்கு நீதிபதிகள் மதன் பி லோகூர் மற்றும் தீபக் குப்தா ஆகியோரின் அமர்வில் விசாரிக்கப்படுகிறது.    விசாரணையின் போது மத்திய அரசைய்ம் மாநில அரசுகளையும் நீதிபதிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

நீதிபதிகள், “மாநிலங்கள்   திடக்கழிவு மேலாண்மை விவகாரத்தில் இவ்வளவு தாமதம் ஏன் செய்கின்றன?  டில்லி நகரில் மட்டும் ஓக்லா, பால்ஸ்வா மற்றும் காஜிப்பூர் ஆகிய இடங்களில் குப்பைகள் மலைகளாக குவிதுள்ளன.   அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்காமல் ஆளுநர் பைஜாலும் முதல்வர் கெஜ்ரிவாலும் அதிகாரப் போர் நிகழ்த்துகின்றனர்.    இந்த இருவரின் செயலற்ற தனத்தால்டில்லி நகரம் நாறி போகிறது.

மும்பையில் மழை நீரில் நகர் மூழ்குவது வாடிக்கை ஆகி வருகிறது.   இதற்கு மத்திய அரசோ மாநில அரசோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.   இதில் நீதிமன்றம் தலையிட்டால் நாங்கள் நிர்வாகத்தில் தலையிடுவதாக வார்த்தைகளை வீசி தாக்குகிறர்கள்.   ஆட்சியளர்கள் பொறுப்பில்லாமல் நடப்பது சரி அல்ல. நாளைக்குள் யார் யாருக்கு என பொறுபு என நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும்” என கோபத்துடன் தெரிவித்துள்ளனர்.