டில்லி

ட்டுமான நிறுவனமான அம்ரபாலி பெருமளவில் மோசடி செய்துள்ளதால்  அந்த பணியை தேசிய கட்டுமான கழகம் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

.

பிரபல கட்டுமான நிறுவனமான அம்ரபாலி குழுமம் நொய்டா நகரில்  பல குடியிருப்புக்களைக் கட்டி தருவதாக விளம்பரம் செய்தது. பலரும் இந்த விளம்பரத்தால் ஈர்க்கப்பட்டுக் குடியிருப்புக்களை வாங்க முன்பதிவு செய்தனர். இவ்வாறு  கோடிக்கணக்கான அளவில் நிறுவனம் முன்பணம் பெற்றது. ஆனால் கட்டுமானப் பணிகள் மிகவும் மெதுவாக நடந்து வந்தன. ஒரு கட்டத்தில் பணிகள் முழுமையாக நின்று போனது.

இதை ஒட்டி உச்சநீதிமன்றத்தில் குடியிருப்புக்கள் வாங்க முன் பதிவு செய்தவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள்  அருண் மிஸ்ரா மற்றும் யுயு லலித் ஆகியோரின் அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் அம்ரபாலி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை மோசடி செய்து வீடு வாங்கியோர், வங்கிகள் மற்றும் அதிகாரிகளை ஏமாற்றி உள்ளது தெரிய வந்துள்ளது. இந்த குழுமத்தின் அனைத்து சொத்துக்களையும் உச்சநீதிமன்றம் முடக்கி தீர்ப்பு அளித்துள்ளது.

மேலும் இந்த தீர்ப்பில், “அம்ரபாலி நிறுவனம் மோசடி செய்துள்ள பணத்தை ஏந்த நிறுவனத்தில் மாற்றி உள்ளது என கண்டுபிடிக்க அமலாக்கத்துறைக்கு  உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் அனைத்து சொத்துக்களும்  முடக்கப்பட்டுள்ளன. வீடு வாங்கியவர்கள் தங்களது பாக்கிப் பணத்தை வங்கி வைப்பு நிதியாக முதலீடு செய்ய வேண்டும்.

அரசு நிறுவனமான தேசிய கட்டுமானக் கழகம் அந்த பணத்தைக் கொண்டு மூன்று மாதங்களுக்கு அனைத்து வீடுகளையும் கட்டி முடித்து வீடு வாங்கியோரிடம் ஒப்படைக்க வேண்டும். அத்துடன் வீடு வாங்கியோ ர் செலுத்திய ரூ. 3500 கோடியை நிறுவன சொத்துக்களை விற்று மீட்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.