டிடிவிக்கு குக்கர் கிடைக்குமா? டில்லி உயர்நீதிமன்றத்துக்கு ‘கெடு’ விதித்த உச்சநீதி மன்றம்

டில்லி:

டிடிவி தினகரன், தனது அணிக்கு குக்கர் சின்னம் வழங்க கோரி உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்திருந்த  மேல் முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

ஏற்கனவே இரட்டை தொடர்பான வழக்கு டில்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அந்த வழக்கில் 4 வாரத்துக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கெடு விதித்த உச்சநீதி மன்றம், அதற்குள் தீர்ப்பு வழங்காவிட்டால், குக்கர் சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என்று  உச்சநீதி மன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு உள்ளது.

ஜெ.மறைவை தொடர்ந்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். இதன் காரணமாக குக்கர் சின்னம் தனக்கு ராசியானது என்று கருதி, அதை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று, சமீபத்தில் அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்ட,  திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தலின்போது, தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தார். ஆனால், தேர்தல் ஆணையம் ஒதுக்க மறுத்த நிலையில்,  தனக்கு தேர்தலில் குக்கர் சின்னத்தையே ஒதுக்க வேண்டும் டெல்லி உயர்நீதி மன்றத்தை நாடினார். ஆனால் குக்கர் சின்னத்தை ஒதுக்க இயலாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பதில் அளித்த தேர்தல் ஆணையம்,  டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால் குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க முடியாது என தெரிவித்தது.  பொதுப்பட்டியலில் உள்ள ஒரு சின்னத்தை தனிப்பட்ட கட்சிக்கு உரிமை கோர முடியாது எனவும் தேர்தல் ஆணையம்  தெரிவித்திருந்தது.

இந்த வழக்கின் வாதங்கள் நிறைவுபெற்ற நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. , இந்த வழக்கில் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், கே.எம். ஜோசப் அமர்வு இன்று தீர்ப்பளித்தது

தீர்ப்பில் ,ஏற்கனவே இரட்டை தொடர்பான வழக்கு டில்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அந்த வழக்கில் 4 வாரத்துக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கெடு விதித்த உச்சநீதி மன்றம், 4 வாரத்திற்குள் அந்த வழக்கில் தீர்ப்பு வராவிட்டால், டிடிவியின் கோரிக்கை குறித்து  தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்  என்றும்,  டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது பற்றி தேர்தல் ஆணையமே முடிவு எடுத்துக்கொள்ள லாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உச்சநீதி மன்றத்தில் 4 வார  கெடு காரணமாக  டில்லி உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள இரட்டை இலை தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்க அதிமுக சார்பில் வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிடிவியின் குக்கர் சின்னத்தைக் கண்டு தமிழக அரசியல் கட்சிகள் மிரண்டுபோய் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.