Random image

பீகார் மகளிர் காப்பகத்துக்கு ரூ.4.5 கோடி அரசு நிதி…வருமான வரித்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி:

பீகார் மகளிர் காப்பக செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பீகார் முசாபர்நகரில் செயல்பட்டு வந்த மகளிர் காப்பக விடுதியில் தங்கியிருந்த பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விடுதிலைய பிரஜேஷ் தாகூர் என்பவர் நடத்தி வந்தார். இவர் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தையும் நடத்திவந்துள்ளார்.

விடுதி நடத்துவதற்கு இதன் மூலம் பீகார் மாநில அரசு நிதியை பிரஜேஷ் பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இவரது சொத்து மற்றும் செலவினங்களை ஆய்வு செய்து விசாரணை நடத்துமாறு வருமான வரித்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பீகார் மாநில அரசிடம் இருந்து ரூ.4.5 கோடி நிதிபெறப்பட்டுள்ளது. இந்த நிதி மீதான செலவினங்களை கண்டுபிடிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.