பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு: வழக்கை எதிர்கொள்ள மாறன் சகோதரர்களுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவு

--

சென்னை:

ட்டவிரோத பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து  சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கில் 12 வாரத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு சென்னை உயர்நீதி நீதிமன்றம் உத்தரவிட்து.

இதை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டுள்ள மாறன் சகோதரர்கள் சார்பில், தயாநிதி மாறன்  சென்னை உயர்நீதி மன்றத்தின் விசாரணைக்கு தடை விதிக்க கோரி, உச்சநீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், வழக்கை மாறன் சகோதரர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்று கூறி, தடை விதிக்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தது.

திமுகவை சேர்ந்த தயாநிதி மாறன்  மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது,  அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி,  பி.எஸ்.என்.எல் இணைப்பை தனது அண்ணனின் சன்டிவி நிறுவனத்துக்கு முறைகேடாக  பயன்படுத்தியதாகவும், இதனால் அரசுக்கு 1.78 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் சி.பி.ஐ வழக்குத் தொடர்ந்தது.

 

இந்த வழக்கை விசாரிதத சிபிஐ நீதிமன்றம், வழக்கில் முகாந்திரம் இல்லை என்று கூறி கடந்த 2017ம் ஆண்டு  மார்ச் மாதம் 14ந்தேதி வழக்கை தள்ளுபடி செய்வதாக கூறி மாறன் பிரதர்ஸ் உள்பட  அனைவரையும் விடுதலை செய்து

இதை  எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, குற்றம் சாட்டப் பட்டுள்ள  கலாநிதிமாறன், தயாநிதிமாறன் உள்ளிட்ட 7 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து பல்வேறு கட்டங்களான நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து, இன்றை விசாரணையில், இந்த வழக்கு குறித்து 12 வாரங்களுக்கு சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இதை எதிர்த்து தயாநிதி மாறன் சார்பில் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, உச்சநீதி மன்றம், வழக்கை தயாநிதி மாறன் உள்பட குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும் எதிர்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டு, தயாநிதி மாறனின் மனுவை தள்ளுபடி செய்தது.