அசாம் குடியுரிமை பட்டியல் : உச்சநீதிமன்றம் கெடு

--

டில்லி

சாம் குடியுரிமை பட்டியலில் பெயர் சேர்ப்பது மற்றும் எதிர்ப்பு தெரிவிக்க டிசம்பர் 15 வரை கெடு விதித்துள்ளது.

வங்கதேசத்தில் இருந்து வந்த பலர் சட்டவிரோதமாக குடியேறி உள்ளதாக புகார்கள் எழுந்தன. அதை ஒட்டி அசாம் குடியுரிமைப் பட்டியலை அர்சு வெளியிட்டது. அந்த பட்டியலில் ஏராளமானோர் பெயர் விடுபட்டதாக புகார்கள் எழுந்தன.

அதை ஒட்டி உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டது. இந்த பெயர் பட்டியலில் இடம் பெற ஐந்து ஆவணங்கள் அவசியம் என நீதிமன்றத்தில் அரசு தெரிவித்தது. அவை, 1951 ஆம் வருட குடியுரிமை பட்டியல், 1965 ஆம் வருட வாக்காளர் பட்டியல், 1971 வரை உள்ள அகதிகள் பட்டியல் மற்றும் 1971 வரை வழங்கபட்ட ரேஷன் கார்டுகள் ஆகும்.

கடந்த 1971 ஆம் வருடம் வங்க தேச கலவத்துக்குப் பின் வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த ஆவணங்களை அரசு கேட்டுள்ளது. ஆனால் பலரிடம் இந்த பழைய ஆவணங்கள் இல்லாததால் வேறு ஆவணங்கள் உபயோகிக்க அனுமதி கோரி உள்ளனர்.

உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு விவகாரத்தில் ஆவணங்களை சேர்க்கவும், மற்றும் ஆவணங்கள் உபயோகிக்க எதிர்ப்பு தெரிவிக்கவும் கடைசி தேதியாக வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதியை அறிவித்துள்ளது.