டில்லி

ச்சநீதிமன்றம் வரதட்சணை கொடுமை வழக்கில் யாரையும் உடனடியாக கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

உலகம் எங்கும் திருமணம் என்பது மிகவும் மகிழ்வான ஒரு நிகழ்வு.  ஆனால் இந்தியாவில் மட்டும் பல நேரங்களில் எதிர்மறை தான்.  காரணம், இந்தியாவில் திருமண பந்தம் உருவாக்கப்படும் போது, வரதட்சணையும் சேர்ந்தே வந்துவிடுகிறது. இந்த வரதட்சணை கொடுமை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த கொடுமையிலிருண்டு பெண்களை காப்பாற்றவே வரதட்சணை தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் இயற்றப்பட்ட பின்,  பாதிக்கப்படும் பெண்கள் புகார் அளிக்கும் போது, உடனடியாக கைது செய்யப்படும் நிகழ்வுகளும்நடக்கின்றன.   அதே நேரத்தில் இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக பல புகார்கள் எழுந்துள்ளன.  பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடினர்.

ராஜேஷ் சர்மா என்னும் அலகாபாத் நகரை சேர்ந்த ஒருவர் அலகாபாத் உயர்நீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து இது போல ஒரு வழக்கை தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், வரதட்சணை தொடர்பான வழக்குகளில் யாரையும் உடனடியாக கைது செய்யக் கூடாது என்றும், உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தது.   அதாவது விசாரணை முடிவு தெரியாமல் கைது செய்யக்கூடாது என்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் குடும்ப நல கமிட்டிகள் அமைக்கப்பட்டு, அந்த கமிட்டியில் அறிக்கை பெறப்பட்ட பின்பே . கைது செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த தீர்ப்பு உச்சநீதி மன்ற சரித்திரத்தில் ஒரு மைல்கல் எனவே சொல்லவேண்டும்.  இனி உண்மையற்ற புகார்கள் கொடுத்து கணவரின் வீட்டாரை மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதை தடுக்க முடியும்.  அதே நேரத்தில் பல இடங்களிலும் காவல் துறையினரால் இந்த சட்டத்தைக் கொண்டு நடத்தப்படும் கட்டைப் பஞ்சாயத்துகளும் ஒரு முடிவுக்கு வரும் என சமூக ஆர்வலர்கள் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்