டெல்லி: குடியுரிமை சட்ட எதிர்ப்பு வழக்குகளை நாளை உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளதால், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள கல்லூரிகள் நாளை மூடப்படுகிறது.

மத்திய அரசு கொண்டு வந்து அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஏராளமான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளன. அந்த வழக்குகள் அனைத்தும் நாளை விசாரணைக்கு வருகின்றன.

இதையடுத்து, வடகிழக்கு மாநிலங்கள் உஷார் நிலையில் இருக்கின்றன. அதன் முக்கிய கட்டமாக, வடகிழக்கு மாநிலங்களில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கவுகாத்தி பல்கலைக்கழகம், திப்ருகார் பல்கலைக்கழகம், வட கிழக்கு மலை பல்கலைக்கழகம், தேஜ்பூர் பல்கலைக்கழகம், அசாம் மகளிர் பல்கலைக் கழகம், அசாம் வேளாண் பல்கலைக்கழகம், நாகாலாந்து பல்கலைக்கழகம், ராஜீவ் காந்தி பல்கலைக்கழகம் ஆகியவை இந்த விடுமுறை அளிக்கும் பல்கலைக்கழக பட்டியலில் அடங்கும்.