லாக்கரில் இருந்த பழைய ரூபாய் நோட்டுகள் : மாற்றுமா ரிசர்வ் வங்கி?

டில்லி

றந்தவரின் பேங்க் லாக்கரில் இருந்த ரூ. 60 லட்சம் மதிப்புள்ள பழைய நோட்டுகளை மாற்ற தொடர்ந்த வழக்கில் இன்னும் நான்கு வாரங்களில் ரிசர்வ் வங்கி பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பையை சேர்ந்தவர்கள் ஆருஷி ஜெயின் (வயது 22) மற்றும் அபூர்வ் ஜெயின் (வயது 25).  இவர்களின் பெற்றோர் ஒன்பது வருடங்களுக்கு முன்பு ஒரு சாலை விபத்தில் இறந்து விட்டனர்.   இறந்த பெற்றோர் வைத்திருந்த பேங்க் லாக்கரை திறந்து பார்க்க, இவர்கள் மைனர்கள் என்பதால் அனுமதி கிடைகவில்லை.  இவர்கள் இருவரும் அதற்காக நீதிமன்றத்தை அணுகினர்.  பல போராட்டங்களுக்குப் பின் இவர்களுக்கு அனுமதி கிடைத்தது. ஐநூறு மற்றும் ஆயிரம் ருபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிப்பு வந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேல் ஆன நிலையில் அந்த லாக்கர் திறக்கப்பட்டது

அந்த லாக்கரில் ரூ. 60 லட்சம் மதிப்பில் கரன்சி நோட்டுக்கள் இருந்தன.  அனைத்தும் தற்போது செல்லாதவை என அறிவிக்கப்பட்ட ரூ 500 மற்றும் ரூ 1000 நோட்டுக்கள்.  அதை மாற்ற ரிசர்வ் வங்கியை அணுகிய போது காலக் கெடு முடிந்து விட்டபடியால் மாற்றித்தர மறுத்து விட்டது.  ஆருஷி மற்றும் அபூர்வ் நீதிமன்றத்தை அணுகினார்கள்.

ஜே எஸ் கேக்கர் மற்றும் சந்திரசூட் ஆகிய நீதிபதிகள் அடங்கிய பெஞ்சின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப் பட்டு வருகிறது.   ஏற்கனவே நீதிமன்றம், மாற்றப்படாத பழைய நோட்டுக்கள்  நோட்டுக்களின் உரிமையாளர்களால் சரியான காரணத்தால் மாற்ற முடியாமல் போனால், அதை கருணையுடன் பரிசீலிக்க வேண்டும் எனக் கூறி இருந்தது.   அதன்படி இந்த நோட்டுக்களை ஏன் மாற்றவில்லை என்பதற்கான பதிலை இன்னும் நான்கு வாரங்களுக்குள் அளிக்கவேண்டும் என ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிம்னறம் உத்தர்விட்டுள்ளது.