அரசு நில விவகாரம் : ராஜஸ்தான் முதல்வருக்கு உச்சநீதிமன்றம் நோட்டிஸ்

--

டில்லி

ரசு நிலத்தை விற்ற வழக்கில் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரராஜெ மற்றும் அவர் மகன் துஷ்யந்த் சிங் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜே மற்றும் அவர் மகன் துஷ்யந்த் சிங் ஆகியோர் தோல்பூர் அரண்மனை அருகே உள்ள நிலத்தை நெடுஞ்சாலை துறைக்கு விற்பனை செய்தனர். இதற்காக அவர்களுக்கு ரூ.1.97 கோடி பணம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நில விற்பனை குறித்து உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு பதியப்பட்டுள்ளது.

அந்த வழக்கு மனுவில் நெடுஞ்சாலைக்கு விற்கப்பட்ட நிலம் அரசுக்கு சொந்தமானது எனவும் அதை தங்கள் சொத்தாக முதல்வரும் அவர் மகனும் விற்றதால் அரசுக்கு ரூ.1.97 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு குறித்து உச்சநீதிமன்றம் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜே மற்றும் அவர் மகன் துஷ்யந்த் சிங் ஆகியோருக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது. இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு உச்சநீதிமன்றம் அந்த நோட்டிசில் கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் டில்லி உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி அளித்த மனு ரத்து செய்யப்பட்டது. அதை எதிர்த்து ராஜஸ்தானை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீஜனா ச்ரேஸ்தா உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may have missed