கேரள வெள்ள நிவாரண பொருட்கள் சேகரித்த உச்சநீதிமன்ற நீதிபதி

டில்லி

ச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் கேரளா மாநிலத்துக்கான வெள்ள நிவாரண பொருட்களை சேகரித்தார்.

கேரளாவில் வெள்ளத்தினால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நிவாரணப் பொருட்கள் அனுப்பட்டு வருகின்றன.   தமிழ் நாட்டில் இருந்தும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மகளிடம் இருந்து பெறப்படுகின்றன.  அந்த பொருட்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.

நேற்று டில்லியில் உள்ள மக்கள் கேரள வெள்ளத்துக்கான நிவாரணப் பொருட்களை சேகரித்தனர்.   அப்போது உச்சநீதிமன்ற வளாகத்தில் நிவாரணப் பொருட்களை நீதிபதி குரியன் ஜோசம் சேகரித்தார்.  குரியன் ஜோசப் தன்னுடன் ஏராளமான நிவாரணப் பொருட்களை எடுத்து வந்திருந்தார்.   அங்கு மற்றவர்கள் அளித்த பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி பேக் செய்து வந்தார்.

டில்லியில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் அனத்தும் விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.  இன்று மதியம் ராணுவ விமானம் மூலம் கேரளாவுக்கு அவை எடுத்துச் செல்லப்பட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்க உள்ளட்ன.

You may have missed