லக்னோ: விகாஸ் துபே என்கவுன்ட்டர் குறித்து, உச்ச நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பில் விசாரணை அவசியம் என்று காங். பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறி உள்ளார்.
60க்கும மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய உத்தரப்பிரதேச ரவுடி விகாஸ் துபே இன்று கான்பூர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் இந்த சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
விகாஸ் துபே என்கவுண்டர் சம்பவம் திட்டமிட்ட செயல், அழைத்துச்சென்ற கார் கவிழவில்லை, கவிழ்க்கப்பட்டுள்ளது. அரசு தனது ரகசியத்தை காப்பாற்றிக் கொள்ள காரை கவிழ்த்துள்ளது என்று அம்மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
இந் நிலையில், விகாஸ் துபே என்கவுன்ட்டர் குறித்து, உச்ச நீதிமன்ற நீதிபதி கண்காணிப்பில் விசாரணை அவசியம் என்று காங். பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறி வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது:
குழந்தைகள், தலித்துகள், பெண்கள், சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் கொலைகளுக்கு எதிரான வழக்குகளில் அரசு முதலிடத்தில் உள்ளது. அதே வேளையில் உ.பி.யில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்து உச்சத்துக்கு சென்றிருக்கிறது.
உண்மையான குற்றங்களின் புள்ளிவிவரங்களை அரசாங்கம் மறைத்து வைத்திருக்கிறது. சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமடைந்துள்ளது, இதன் விளைவாக துபே போன்ற பயங்கரமான குற்றவாளிகள் மாநிலத்தில் வளர்ந்து வருகின்றனர். அவர்களுக்கு மிகப்பெரிய வணிகங்களும் அரசியல் தொடர்புகளும் உள்ளன என்றார்.