எரிக்சனுக்கு பாக்கியை தராத அனில் அம்பானி நாளையும் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி

ரிக்சன் நிறுவனத்துக்கு தர வேண்டிய பாக்கியில் ரூ.550 கோடியை இன்னும் தராத ரிலையன்ஸ் அதிபர் அனில் அம்பானியை நாளையும் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மொபைல்கள் கொள்முதல் செய்த வகையில் எரிக்சன் நிறுவனத்துக்கு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் சுமார் ரூ. 1600 கோடிக்கு மேல் தர வேண்டி இருந்தது. அதில் ரூ. 550 கோடியை உடனடியாக எரிக்சன் நிறுவனத்துக்கு தர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் ரிலையன்ஸ் நிறுவனம் அந்த தொகைய தராமல் இழுக்கடித்தது.

அதை ஒட்டி எரிக்சன் நிறுவனம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் உடனடியாக முந்தைய உத்தரவின்படி ரூ. 550 கோடியை எரிக்சன் நிறுவனத்துக்கு தர வெண்டும் என உத்தரவிட்டது. இம்முறையும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அந்த தொகையை செலுத்தாததா எரிக்சன் நிறுவனம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் நாரிமன் மற்றும் வின்செண்ட் சரண் ஆகியோர் அடங்கிய அமர்வின் கீழ் இன்று விசாரணைக்கு வந்தது. அதை ஒட்டி இன்று ரிலையன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானி, அந்நிறுவன தலைவர்களான சதிஷ் சேத், மற்றும் சாயா விரானி ஆகியோர் ஆஜர் ஆனார்கள்.

அப்போது அமர்வு தர வேண்டிய பாக்கியை திருப்பித் தராத அனில் அம்பானிக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. அத்துடன் அவர்கள் மூவரையும் நாளை மீண்டும் ஆஜராக வேண்டும் என அமர்வு உத்தரவிட்டுள்ளது.