உச்சநீதிமன்ற  உத்தரவு காரணமாக உமாபாரதி பதவி விலகத் தேவை இல்லை: ஜெட்லி

அருண் ஜெட்லி

டில்லி:

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து விடுக்கப்பட்ட பா.ஜனதா தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, மத்திய மந்திரி உமா பாரதி உள்ளிட்ட 13 பேரை மீண்டும் விசாரிக்கும்படி  உச்சநீதிமன்றம் சி.பி.ஐக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய நீர்வளத்துறை மந்திரி உமா பாரதி பதவி நீக்கம் செய்யப்படுவாரா என்று நிதி அமைச்சர்  அருண்ஜெட்லியிடம் டில்லியில் செய்தியாளர்கள்  கேள்வி எழுப்பினர்.

உமா பாரதி

அதற்கு ஜெட்லி, “1993-ம் ஆண்டிலிருந்தே இந்த வழக்கு நடந்து வருகிறது. அந்த வழக்குதான் தற்போதும்  தொடர்கிறது. இதில் எந்த புதிய நிலையும் ஏற்படவில்லை. ஆகவே  உமாபாரதி பதவி விலகத் தேவை இல்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலே பதவி விலகவேண்டும் என்றால் தற்போது காங்கிரசில் முதல்-மந்திரிகளாக உள்ள அனைவரும் பதவி விலக நேரும்“ என்று ஜெட்லி தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published.