டில்லி:

பெரும்பான்மை இல்லாத நிலையில், கர்நாடக முதல்வராக எடியூரப்பாவை மரபுகளை மீறி கவர்னர் அழைத்து பதவி பிரமாணம் செய்து வைத்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் நாளை மாலை 4 மணிக்கு கர்நாடக சட்டப்பேரவையில் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.

இது தொடர்பாக ஏற்கனவே நேற்று முனம் இரவு நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து, இன்று மீண்டும் உச்சநீதி மன்றத்தில் விசாரணை நடைபெற்ற வருகிறது. இன்றைய விசாரணையின்போது, காங்கிரஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில்சிபல், எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தது தன்னிச்சையான முடிவு, யாரை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என முடிவு செய்யும் சுதந்திரம் ஆளுநருக்கு இல்லை என்று வாதிட்டடார்.

இன்றைய விசாரணையின்போது, ஏற்கனவே உச்சநீதி மன்றம் கேட்டிருந்த, எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதங்களை மத்தியஅரசு வழக்கறிஞர் முகுல் ரோத்தகி தாக்கல் செய்தார்.

அப்போது, 2 கடிதங்களை உச்சநீதிமன்றத்தில்  தாக்கல் செய்து வாதாடிய முகுல் ரோத்தகி,   மே 15 ஆம் தேதி அளிக்கப்பட்ட கடிதத்தில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி இல்லாததால் பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரியது.  மே 16 ஆம் தேதி அளிக்கப்பட்ட கடிதத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான ஆதரவு உள்ளது என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து, உச்சநீதிமன்ற நீதிபதி சிக்ரி,  பெரும்பான்மை இருப்பதாக காங்- மஜத கூறிய நிலையில் பாஜகவை மட்டும் ஆளுநர் அழைத்தது ஏன்?  பாஜக தரப்பு வழக்கறிஞருக்கு கேள்வி எழுப்பினார்.

மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பு கோர யாரை முதலில் அனுமதிப்பது என்பதுதான் கேள்வி பெரும்பான்மையை பேரவையில்தான் நிரூப்பிக்க வேண்டுமே தவிர நீதிமன்றத்தில் இல்லை என்று கூறப்பட்டது.

அதைத்தொடர்ந்து, கர்நாடக பேரவையில் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிடலாமா?; பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாரா? என்று பாஜ வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அப்போது காங்கிரஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கபில்சிபல்,  எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தது தன்னிச்சையான முடிவு.  யாரை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என முடிவு செய்யும் சுதந்திரம் ஆளுநருக்கு இல்லை. ஆட்சியமைக்க அழைக்கும் விவகாரத்தில் மரபுகள், நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்  என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து,  அனைத்து எம்எல்ஏக்களும் சட்டப்பேரவைக்கு வந்து வாக்களிக்க பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யலாமா? என்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பாஜ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோத்தகி மேலும் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அதை நிராகரித்த உச்சநீதி மன்றம், நாளை மாலை 4 மணிக்கு எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று  உத்தரவிட்டது.