Random image

ராக்கெட் விஞ்ஞானிக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு : உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி

ஸ்ரோ முன்னாள் ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் ராக்கெட் விஞ்ஞானியாக பணி புரிந்தவர் நம்பி நாராயணன்.   இவர் மீது கடந்த 1994 ஆம் ஆண்டு கேரள மாநில காவல்துறையினரால் ஒரு வழக்கு பதியப்பட்டது.   அதில் நம்பி நாராயணன் ஒரு சில வெளிநாடுகளுக்கு இந்திய ராக்கெட் தொழில் நுட்பங்களை அளித்ததாக கூறப்பட்டிருந்தது.

பிறகு அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.   சிபிஐ நடத்திய விசாரணையில் நம்பி நாராயணன் குற்றமற்றவர் எனவும் கேரள காவல்துறை அளித்த புகார் தவறானது எனவும் உறுதி ஆனது.   அதனால் நம்பி நாராயணன் தன் மீது பொய் வழக்கு போட்ட கேரள அரசு ரூ. 1 கோடி இழப்பீடு தரவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்ரம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.   அந்த தீர்ப்பில், கேரள அரசு ரூ.50 லட்சம் இழப்பீடை நம்பி நாராயணனுக்கு வழங்க  வேண்டும்.  அத்துடன் தவறான வழக்கை பதிவு செய்த காவல்துறை மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓய்வு பெற்ற ஒரு நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்க வெண்டும்.    இந்த நடவடிக்கை எவ்வாறு அமைய வேண்டும் என்பதை இந்தக் குழு ஆய்ந்து முடிவு எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.