Random image

தேசிய குடிமக்கள் பதிவேடு முறைகேடு : மீண்டும் பதிய உச்சநீதிமன்றம் நடவடிக்கை

டில்லி

தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சுமார் 40 லட்சம் பேர்களின் பெயர்களை சேர்க்காமல் முறைகேடு நடந்தததால் வரும் 25ஆம் தேதி முதல் மீண்டும் பதிவு நடக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அசாமில் வெளிநாட்டவர் ஊடுருவல் அதிகரித்துள்ளதாக எழுந்த புகாரை ஒட்டி அம்மாநிலத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டது.   அந்த கணக்கெடுப்பின் போது ஐந்து வகையான ஆவணங்கள் சோதிக்கப்பட்டன.  அவை 1951 வருட தேசிய குடிமக்கள் பதிவேடு,  1971 ஆம் வருட வாக்களர் பட்டியல், 1971 க்கு முன் நடந்த தேர்தலின் போது இருந்த அகதிகள் பட்டியல்,  திரிபுரா மாநிலத்தில் அளிக்கப்பட்ட குடியுரிமை சான்றிதழ் மற்றும் ரேஷன் கார்டுகள் ஆகும்.

இதன் அடிப்படையில் தற்போது வெளியிடப்பட்ட பதிவேட்டில் சுமார் 40 லட்சம் பேர்கள் குறித்த விவரங்கள் விட்டுப் போனதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.   பெயர்கள் விட்டுப் போனவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.    இது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  அப்போது உச்சநீதிமன்றம் 40 லட்சம் பேர் விடுபட்டது குறித்த மறு பதிவை உச்சநீதிமன்ற அமர்வு வரும் 25 ஆம் தேதி முதல் நடத்தும் என தெரிவித்துள்ளது.

இந்த மறு பதிவை நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு நடத்த உள்ளது.   இந்த பதிவு 60 நாட்கள் நடைபெற உள்ளது.   அப்போது பெயர்கள் விடுபட்டுப் போனவர்கள் இது குறித்த விவரங்களை அமர்விடம் அளிக்கலாம்.   தற்போது இவர்களின் விவரங்களை சரிபார்க்க உச்சநீதிமன்றம் மேலும் 10 ஆவணங்களை சேர்த்துள்ளது.

இதன் மூலம் தற்போது ஆவணங்களின் எண்ணிக்கை 15 ஆகி உள்ளது.  பெயர் விட்டுப் போனவர்கள் குறித்து அரசு அவர்களிடம் முன்பு கேட்கப்பட்ட 5 ஆவணங்களில் ஒன்று கூட இல்லை என தெரிவித்திருந்தது.  அதை ஒட்டி உச்சநீதிமன்றம் மேலும் 10 ஆவணங்களை சேர்த்துள்ளது.  இந்த ஆவணங்களினால் வெளி நாட்டவர் குடியுரிமை பெறுவதை தடுக்க முடியும் என உச்சநீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.