டிஜிபி பணி நியமனங்கள்: உச்சநீதி மன்றம் புதிய வழிகாட்டுதல்கள் அறிவிப்பு
டில்லி:
டிஜிபி பணி நியமனங்கள் குறித்து உச்சநீதி மன்றம் புதிய வழிகாட்டுதல்களை அறிவித்து உள் ளது. இதன் காரணமாக பணி ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்டு செய்யப்படுவது இனி தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பாலான மாநிலங்களில் காவல்துறை மற்றும் அரசு துறை உயர் அதிகாரிகள் ஓய்வு பெறும் நாளிலோ அல்லது அதற்கு முந்தைய நாளிலோ சஸ்பெண்டு (இடை நீக்கம்) செய்யப்பட்டு வருவது தொடர்ந்து வருகிறது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதி மன்றம் புதிய வழிகாட்டுதல் முறைகளை அறிவித்து உள்ளது.
அதன்படி, சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமனத்திற்கான பணியை தற்போது பணியில் இருக்கும் டிஜிபி ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதம் முன்னரே ஆரம்பிக்கவேண்டும். அதற்கான பட்டியலை யூபிஎஸ்சிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அதிலிருந்து யூபிஎஸ்சி 3 பேர் பட்டியலை அனுப்பும்.
அந்த 3 பேர் பட்டியலில் இருந்து ஒருவரை மாநில அரசு நியமிக்கலாம்.,
இடைக்கால சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமனம் கிடையாது.
பொறுப்பு டிஜிபி என்பது இனி கிடையாது.( உதாரணமாக உளவுத்துறை டிஜிபியாக வேண்டியப்பட்ட நபரை நியமித்து கூடுதல் பொறுப்பாக சட்டம் ஒழுங்கை கவனிக்க சொல்வது)
அவ்வாறு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்படுபவர் இரண்டு ஆண்டுகள் பணி செய்யும் தகுதி உள்ளவராக இருக்க வேண்டும்.
இவ்வாறு உச்சநீதி மன்றம் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை அறிவித்து உள்ளது.