மருத்துவப் படிப்புக்கு ஒரே நுழைவுத்தேர்வு -கிராமப்புற மாணவர் எதிர்காலம் ?

--

வியாழக்கிழமை அன்று உச்ச நீதிமன்றம் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (NEET) மூலம், எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் மற்றும் முதுநிலை படிப்புகளுக்காக ஒரு பொதுவான நுழைவுத் தேர்வுக்கு வழிவகுத்தது.

MEDICAL EXAMS 3

மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் (MCI), மே மாதத்தில் நடக்கவிருக்கும் அகில இந்திய முன்-மருத்துவ டெஸ்ட், NEET-1 எனவும் ஜூலை 24 ஆம் தேதி  நடக்கவிருக்கும் இரண்டாம் கட்ட தேர்வு, NEET-2  எனவும்   கருதப்படும் என்று கூறியுள்ளது.  இரண்டு தேர்வுகளுடைய இணைந்த முடிவுகளும் ஆகஸ்ட் 17 அன்று வெளியிடப்படும். மத்திய அரசால் முன்மொழியப்பட்ட அட்டவணையை உச்ச நீதிமன்றம் செயல்படுத்த அனுமதி வழங்கியது.

NEET மூலம் நுழைவுத் தேர்வு நடத்துவதாக முடிவு செய்ததை தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மருத்துவ கல்லூரிகள் சங்கம் உட்பட பல மாநிலங்கள் எதிர்த்தன, அதைத் தவிர சி.எம்.சி. வேலூர் போன்ற சிறுபான்மை நிறுவனங்கள் அந்த முடிவை சட்டவிரோதம் மற்றும் அரசியலமைப்பிற்கு முரணானது என்றும் கூறினர்.

MEDICAL ENTRANCE 23

வியாழனன்று, அரசு சாரா நிறுவனமான சங்கல்ப் அறக்கட்டளை, நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் சேர ஆர்வமாக இருக்கும் மாணவர்களுக்கு அதிகாரிகள்  NEET தேர்வு  நடத்துவதில்லை எனவும், தனியார் மருத்துவ கல்லூரிகள் மாணவர்களை அனுமதிக்க தாங்களே சொந்தமாக தேர்வுகளை நடத்துகிறார்கள் எனவும் வாதிட்டு தாக்கல் செய்த பொது நல வழக்கை நீதிமன்றம் விசாரித்தது.

MEDICAL ENMTRANCE

ஏப்ரல் 11 அன்று, உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற முந்நாள் தலைமை நீதிபதியான அல்டமாஸ் கபிர் வழங்கிய சர்ச்சைக்குரிய தீர்ப்பான, அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் மற்றும் முதுநிலை படிப்புகளுக்கும் ஒரே பொதுவான நுழைவுத் தேர்வு வைக்க வேண்டுமென்றதை மீண்டும் நினைவு கூர்ந்தது.

EDICLA ADMISSIONS

அரசு சாரா மையம் அதன் மனுவில், மருத்துவக் கவுன்சில் மற்றும் சிபிஎஸ்இ, தேசிய தகுதி நுழைவுத் தேர்வு செயல்படுத்த வேண்டும் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தாமல் தாமதிக்கின்றன  என்று கூறினர்.

EDICAL ADMISSIONS

அரசு சாரா மையம் நடத்திய ஒரு ஆய்வின் படி, தனியார் மற்
றும் அரசு அதிகாரிகள்  தனித்தனியாக  90 நுழைவுத் தேர்வுகள் நடத்துகின்றனர் எனவும், அதன் விளைவாக தேர்வை எதிர்கொள்ள லட்சக்கணக்கான ரூபாய் செலவிடப்படுவதாகவும் மனுதாரர் கூறினார்.

மத்திய அரசு கடந்த 2013-ஆம் ஆண்டில் கொண்டு வந்த மருத்துவ நுழைவுத் தேர்வு செல்லாது என்று அந்த ஆண்டே உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரித்த நீதிபதி அனில் தவே தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, ஏற்கனவே அளித்த தீர்ப்பு செல்லாது என்றும், இந்த வழக்கை மீண்டும் விசாரித்து முடிக்கும் வரை மத்திய அரசு அறிவித்த நுழைவுத்தேர்வு செல்லும் என்றும் கடந்த 11 ஆம் தேதி ஆணையிட்டது.
இப்போது உச்சநீதிமன்றம் மாணவர்கள் மீது அடுத்த தாக்குதலைத் தொடுத்திருக்கிறது. உச்சநீதிமன்றம் ஏப்ரல் 11 ஆம் தேதி அளித்த தீர்ப்பை செயல்படுத்துவதாக இருந்தாலும் அடுத்த ஆண்டு முதல் தான் செயல்படுத்த முடியும் என்பதால் இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வு கிடையாது என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனால் தமிழ்நாட்டு மாணவர்கள் ஓரளவு நிம்மதி அடைந்திந்தனர். ஆனால், அதற்குள்ளாகவே, மருத்துவப்படிப்புக்கான நுழைவுத் தேர்வு நடப்பாண்டிலேயே நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. அத்துடன் நிற்காமல் இந்திய மருத்துவக் கவுன்சிலுடன் கலந்து பேசி, மே 1-ஆம் தேதி முதல் முதல்கட்ட நுழைவுத் தேர்வும், ஜூலை 24 ஆம் தேதி இரண்டாம் கட்ட நுழைவுத் தேர்வும் நடைபெறும்; இதன்முடிவுகள் ஆகஸ்ட் 17 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கிறது. நீதிமன்றத்தின் இந்த அவசரத்திற்கான காரணத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. இவ்வளவு அவசரம் தேவையா? என்பதும் தெரியவில்லை. உதாரணமாக மே-1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் அகில இந்திய மருத்துவ/ பல் மருத்துவப் பட்டப்படிப்புக்கான நுழைவுத் தேர்வு முதல்கட்ட நுழைவுத் தேர்வாக கருதப்படும். இத்தேர்வை எழுத தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களின் மாணவர்கள் விண்ணப்பித்திருக்க மாட்டார்கள் என்பதால் அவர்களுக்காக ஜூலை 24 ஆம் தேதி இரண்டாம் கட்ட நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.

சமூகநீதிக்கு எதிரானது: 

ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்தியாவில் பொது நுழைவுத் தேர்வு என்பதே ஏற்க முடியாத ஒன்றாகும். சென்னை, தில்லி போன்ற பெருநகரங்களில் வழங்கப்படும் கல்விக்கும், இராமநாதபுரம், திருவாரூர், தருமபுரி மாவட்டங்களின் குக்கிராமங்களிலுள்ள பள்ளிகளில் வழங்கப்படும் கல்விக்கும் இடையிலான வித்தியாசம் மலைக்கும், மடுவுக்கும் இடையிலான வித்தியாசத்துக்கு சமமானதாகும். பல கிராமப்புற பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லாத நிலையில், நகர்ப்புற பள்ளிகளில் ஒவ்வொரு பாடத்துக்கும் இரு ஆசிரியர்கள் உள்ளனர். இப்படிப்பட்ட இரு தரப்பு மாணவர்களையும் ஒன்றாக கருதுவது சமூகநீதிக்கு செய்யப்படும் மிகப்பெரிய துரோகம் ஆகும். இதை மத்திய அரசு உணராதது வேதனை அளிக்கிறது.

மத்திய அரசுப் பள்ளிகளில் ஒரு பாடத்திட்டமும், பல்வேறு மாநிலங்களின் பள்ளிகளில் வேறு பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டு வருகின்றது. இது போன்ற ஒரே நுழைவுத்தேர்வு சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு இருப்பதால் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் , குறிப்பாக நுழைவுத்தேர்விற்கென சிறப்புப் பயிற்சி பெற வழியில்லாத கிராமப்புற மானவர்கள் பெரிதும் பாதிக்கப் படுவர். அவர்களுக்கு மருத்துவப் படிப்பு எட்டாகனியாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் சமூகநீதியின் அங்கமான இடஒதுக்கீட்டை அமல்படுத்த இந்த நுழைவுத் தேர்வு தடையாய் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஒரே நுழைவுத் தேர்வு :வைகோ கண்டனம்