சட்டத்தை விட சம்பிரதாயம் உயர்வானதா ? உச்ச நீதி மன்றம் விளாசல்

பாரம்பரியத்தை ரசியலமைப்பு வெல்லுமா ?: சபரிமலைக்கு உச்ச நீதி மன்றத்தின் கேள்வி

sabarimalai featured

 அரசியலமைப்பு தான் விவாதத்தின் அடிப்படையாக இருக்க வேண்டும், பாரம்பரியம் அல்ல என்று உச்ச நீதிமன்றம் சபரிமலை கோவில் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது.

திங்களன்று உச்ச நீதிமன்றம் சபரிமலை கோவில் வழக்கின் மனுதாரர்களிடம்  அரசியலமைப்பை விட பாரம்பரியம் பெரியதா என்று கேட்டது.

சபரிமலை கோயில் வாரியத்தின் சமர்ப்பிப்புகளுக்கு பதில் கோரும் வகையில் நீதிமன்றம் திங்களன்று இந்த கருத்துக்களை தெரிவித்தது. பிப்ரவரியில், உச்ச நீதிமன்றம், இந்த விஷயம் குறித்து பதில் கூற வாரியத்திற்கு ஆறு வாரங்கள் நேரம் கொடுத்திருந்தது.

“கோயிலின்  எந்த பகுதியிலும் பெண்கள் நுழைவதை தடுக்க கோவிலுக்கு என்ன உரிமை இருக்கிறது, அரசியலமைப்பை அஸ்திவாரமாகக் கொண்டு தயவு செய்து  வாதிடுங்கள்” என்று உச்ச நீதிமன்றம் அனுசரித்தது.

பிப்ரவரி 11 ம் தேதியன்று, வேதங்களும் உபநிடதங்களும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே வேற்றுமை பார்க்காத போது வாரியம் ஏன் பெண்களுக்கு எதிராக பாகுபாடு பார்கின்றது என்று நீதிமன்றத்தில் வினவியது.

உச்சநீதிமன்றம் மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரனை இந்த வழக்கிற்காக நீதிமன்றத்தின் நண்பராக நியமித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் சபரிமலை ஐயப்பன் கோவிலிடம் மாதவிடாய் உள்ள பெண்களை கோவிலில் நுழைவதற்கு தடை செய்ததைப் பற்றி கேள்வி கேட்ட போது இப்பிரச்சினை முதலில் முக்கியத்துவம் பெற்றது. இளம் வழக்கறிஞர்கள் சங்கம், கோயிலுக்குள் அனைத்து பெண்களும் நுழைய அனுமதி கோரி தாக்கல் செய்த பொது நல வழக்கின் மனுவை நீதிமன்றம் விசாரித்தது. அதைத் தொடர்ந்து, இந்த விஷயம் பல திடுக்கிடும் திருப்பங்களைக் கண்டிருக்கிறது.

ஆரம்பத்தில் முதல்வர் உம்மன் சாண்டி எந்த மத விவகாரங்களிலும் அரசாங்கம் தலையிட முடியாது என்று கூறியதை அடுத்து பிப்ரவரி 5 அன்று ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு, நூற்றாண்டுகள் பழமையான மத பாரம்பரியத்தைப் பாதுகாக்க விரும்புவதாகக் கூறியது.

எதிர்க்கட்சி சிபிஐ (எம்) மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன், இப்பிரச்சினைத் தொடர்பாக உச்ச நீதிமன்றம் இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்று கூறினார். சில இடது சாரி தலைவர்கள்  இப்பிரச்சினை முதன்முதலில் வெளிச்சத்திற்கு வந்த போது உச்ச நீதிமன்றத்தின் கருத்துக்களை வரவேற்றிருந்தனர்.

 

பெண்கள் கோவில் நுழையும் போராட்டம் குறித்த செய்திகள்:

திருப்தி தேசாய் அறிவிப்பு: அடுத்து சபரிமலையில் நுழைவோம்

ஷிங்கனூர் சனிபகவான் கோவிலில் நுழைவோம்

மராத்திய புத்தாண்டு அன்று பெண்கள் சனிக்கோவிலில் நுழைந்தனர்

 

கார்ட்டூன் கேலரி