Random image

வன்கொடுமை சட்ட திருத்தத்துக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டில்லி

லித் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை சட்டத்தில் செய்த திருத்தத்துக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

தலித் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் மூலம் பலர் தேவை இன்றி வழக்கு தொடர்வதாக புகார்கள் எழுந்தன.  இதை ஒட்டி பலரும் இந்த சட்டத்தை பழிவாங்க மட்டுமே பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டன.   இதை ஒட்டி இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கையில் இந்த சட்டத்தில் பல திருத்தங்களை அறிவித்தது.   அதன் படி இவ்வாறு குற்றம் சாட்டப்படுபவர் மீது தீவிர விசாரணைக்கு பிறகே வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் ஜாமீன் பெறக் கூடிய வழக்கு மட்டுமே பதிய வேண்டும் எனவும் திருத்த அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பியது.   மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் உள்ளிட்ட பலர் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்தனர்,  இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது அரசு தரப்பில் இந்த திருப்பங்களுக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றத்திடம் கோரிக்கை விடப்பட்டது.

உச்ச நீதிமன்றம்  இந்த கோரிக்கையை ஏற்கவில்லை.  அத்துடன் இடைக்கால தடை விதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது.  இந்த வழக்கின் விசாரணை 6 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது,