டெல்லி:

காஷ்மீரில் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டது தொடர்பான வழக்கை 7நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்த விசாரணையில்,  அதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வே விசாரிக்கும் என்று உத்தரவிட்டு, வழக்கை ஒத்தி வைத்துள்ளது.

கடந்த ஆண்டுஆகஸ்டு 6ந்தேதி காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட வந்த சிறப்பு அந்தஸ்து பிரிவு  370ஐ மத்தியஅரசு ரத்து செய்தது. இதை எதிர்த்து, ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், 5நீதிபதிகளை கொண்ட அமர்வு விசாரிக்கும் என அறிவித்தது. ஆனால், இந்த சிறப்பு பிரிவை ரத்து செய்வது தொடர்பாக கடந்த 2017 – 2018 ஆகிய ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும், அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும்  இருப்பதால் இதை 7 நீதிபதிகள் கெண்ட அமர்வுக்கு  மாற்றலாமா? வேண்டாமா? என்ற பிரட்சனை எழுந்தது.

இந்த நிலையில, இன்று உச்சநீதிமன்றம் புதிய உத்தரவை வழங்கி உள்ளது. அதன்படி, காஷ்மீரில் 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக ஆதரித்தும், எதிர்த்தும் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்குகளை 5 அரசியல் சாசன அமர்வே விசாரிக்கும். 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டிய அவசியம் எழவில்லை.

370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான மனுக்களை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை தொடங்கும் என்று உத்தரவிட்டு வழக்கை தேதி குறிப்பிடாமல்  ஒத்திவைத்தனர்.