டில்லி:

த்திய அரசுக்கு எதிராக சி.பி.ஐ. இயக்குநர் அலோக்வர்மா தொடர்ந்த வழக்கில் உச்சநீதி மன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அலோக் வர்மா சிபிஐ இயக்குனராக நீடிக்கலாம் என்று கூறி மத்தியஅரசின் உத்தரவை ரத்து செய்துள்ளது உச்சநீதி மன்றம்.

இந்த தீர்ப்பு மோடி அரசுக்கு விழுந்த மற்றொரு சம்மட்டி அடி என்று விமர்சிக்கப்படுகிறது.

சிபிஐ இயக்குநர்களிடையே நடைபெற்று வந்த பனிப்போர் காரணமாக, சிபிஐ இயக்குனர்  பணியியில் இருந்து கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதற்கு எதிராக அலோக்வர்மா மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில்  உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

இன்று உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இல்லாத நிலையில்,  இந்த வழக்கின் தீர்ப்பு உச்சநீதி மன்றத்தின் கோர்ட் எண் 12ல் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் வழங்கினார்.

தீர்ப்பில் , சிபிஐ தலைவரை கட்டாய  விடுமுறையில் அனுப்பி வைத்த மத்திய அரசின் நடவடிக்கை சரியானது அல்ல என்றும் நீதிபதி விமர்சித்துள்ளார். சி.வி.சி மற்றும் டிஓபிடியால்  வழங்கப்பட்ட உத்தரவுகளையும் உச்சநீதி மன்றம் ரத்து செய்தது.  சிபிஐ இயக்குனராக அலோக் வர்மா தொடரலாம் என்றும் கூறியுள்ளார். மேலும், அலோக் வர்மா மத்திய அரசு சம்பந்தமான எந்த வொரு கொள்கை முடிவுகளையும் எடுக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.

உச்சநீதி மன்றத்தின் இன்றைய தீர்ப்பு மோடி அரசின் மூக்கை உடைத்துள்ளது. ஏற்கனவே ஆதார் போன்ற வழக்குகளில் மோடி அரசின் உத்தரவுகளை  உச்சநீதி மன்றம் கடுமையாக விமர்சித்து ரத்து செய்துள்ள நிலையில், தற்போது அலோக் வர்மா வழக்கில்  மோடி அரசின் உத்தரவை ரத்து செய்துள்ளது.

இதன் காரணமாக சிபிஐ தற்காலிக இயக்குனராக உள்ள நாகேஸ்வரராவ் பதவி கேள்விக்குறியாகி உள்ளது.